இலுப்பை பூவில் தயாரிக்கப்படும் மது இனி பாரம்பரிய மதுபானமாக அறிவிக்கப்படும்.. மத்தியபிரதேச அரசு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இலுப்பை பூவில் தயாரிக்கப்படும் மதுவை பாரம்பரிய மதுபானமாக அறிவிக்க மத்தியபிரதேச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இந்த  நிகழ்வில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அவர் அதில், பேசியதாவது,

இலுப்பை பூவில் இருந்து தயாரிக்கப்படும்  மதுபானம் புதிய கலால் கொள்ளைகளின் படி இனி சட்டவிரோதமாக ஆகாது என தெரிவித்தார். இந்த மதுபானம் பாரம்பரிய மதுபானம் என்ற பெயரில் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

இதனால், பழங்குடி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர்களின் பொருளாதாரம் மேம்படும் எனவும் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The traditional wine made from the elm flower will also be announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->