நீட் தேர்வுக்கு எதிரான ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணைக்கு வரப்போகும் வழக்கு! 

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சட்டப் போராட்டத்தினை நடத்தி வருகிறது. இதுவரை உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பெரும்பாலும் விசாரணை இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம் என கடந்த 2017 ஆம் ஆண்டு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்புக்கு எதிராக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அப்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அவசர சட்டமாக இயற்றி 2020-2021 கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தியது. இதனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் பாதிக்காத வகையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு இன்று நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு சில திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் வலியுறுத்தல்கள் அடிப்படையில் இந்த ரிட் மனு விசாரணைக்கு உகந்தது என உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனால் நீட் தேர்வு கட்டாயத்திற்கு எதிராக தமிழக அரசின் ரிட் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Supreme Court is ready to hear the writ petition against the NEET exam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->