தன்னை பற்றிய காமெடி மீம்களை பகிர்ந்து வரும் முன்னாள் அமைச்சர் மத்திய அமைச்சர்..!! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் மீம்கள் கொண்டு பிரபலங்களை கிண்டல் செய்வது என்பது தற்போது இயல்பான நிகழ்வாகியுள்ளது. இந்த மீம்கள் விமர்சனம், பகடி என பல வகைகளில் அவர்களை பற்றிய கருத்துக்களை கொண்டிருக்கும். அப்படி அண்மையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூரின் மீம்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் ஓணம் பண்டிகையில் கலந்து கொள்வதற்காக தனது பூர்வீக வீட்டிற்கு சென்றார். அங்குள்ள கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு அவர் அங்கு சிதறு தேங்காய் உடைத்தார். அந்த புகைப்படத்தை மீம் கிரியேட்டர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தேனீர் கடை, விளையாட்டு மைதானம், நடன மேடை என பல்வேறு இடங்களில் சேர்த்து பகடி படங்களாக சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படங்களை தனது சமூகவலைதள பக்கதில் பகிர்ந்த காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவர் சசிதரூரை டேக் செய்து இருந்தார். இதற்கு பதிலளித்த சசி தரூர் “இந்த படங்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது என கூறி அந்த மேலும் சில படங்களை பகிர்ந்துள்ளார்.”


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The former minister is a Union Minister who has been sharing comedy memes about himself


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->