எனக்கு வரதட்சணை தாங்க.. கேட்டு வாங்கி நல்லது செய்த மணமகள்.. குவியும் பாராட்டு..! - Seithipunal
Seithipunal


வரதட்சணை பணத்தை மகளிர் விடுதிக்கு மணப்பெண் வழங்கிய செயல் பலரால் பாரட்டப்பட்டு வருகிறது.

திருமணத்தின் போது வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் பெரும்பாலான இடங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தி வரதட்சணை பணத்தில் மணப்பெண் ஒருவர் செய்த செயல் பலரால் பாராட்ட பெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி கான்வார். இவருக்கு கடந்த 21ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணத்திற்கு தரவிருக்கும் வரதட்சணையை மகளிர் விடுதிக்கு நன்கொடை அளிக்க முடிவு செய்தார்.

இதனை அவர் தந்தையிடம் சென்று கூற தந்தையும் பச்சை கொடி காட்டி, நிரப்பபடாத காசோலையை கொடுத்து வேண்டிய பணத்தை நிரப்பி கொள்ள சொல்லி இருக்கிறார்.

அதன் படி அவரது மகளும் 75 லட்சம் ரூபாய் பணத்தை நிரப்பி அதனை பார்மரில் மகளிர் தங்கும் விடுதி கட்டுமான பணிகளுக்காக நன்கொடையாக அளித்தார். மணமகளுக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The bride who gave the dowry money to the women's house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->