செங்கோட்டை குண்டுவெடிப்பு: டில்லியில் 06 மாவட்டங்களில் 12 இடங்களை நோட்டமிட்ட சதிக்காரன் உமர்; புலனாய்வுக் குழுவினர் தகவல்..! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டை உலுக்கியுள்ள நிலையில், இந்த கொடூர தாக்குதலுக்கு முன்பாக பயங்கரவாதி டாக்டர் உமர், டில்லியில் 12 இடங்களை நோட்டமிட்டு சென்றுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் புலனாய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

டில்லியில் செங்கோட்டை அருகே பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பில் தொடர்பான விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி டாக்டர் உமர் மற்றும் அவனின் கூட்டாளிகள் காரில் எங்கு எல்லாம் சென்று வந்துள்ளனர்..? யாரை சந்தித்துள்ளனர் என்ற விவரங்களை விசாரணைக் குழுவினர் சேகரித்துள்ளனர்.

அதன்படி, டில்லியில் குண்டுவெடிப்பை நடத்துவதற்கு முன்பாக  பயங்கரவாதி டாக்டர் உமர் டெல்லியில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளான். அதில் அவன் 12 இடங்களை பார்க்க சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சுபாஷ் பிளேஸ், அசோக் விஹார், கன்னாட் பிளேஸ், ரஞ்சித் மேம்பாலம், டிலைட் சினிமா, ஷாஹீத் பகத் சிங் மார்க் மற்றும் ரோஹ்தக் சாலை ஆகிய இடங்களை அவன் சுற்றியுள்ளான். அத்துடன், வடக்கு டில்லிக்கும் சென்று வந்துள்ளான். அங்கு அவன், காஷ்மீரி கேட், தரியாகஞ்ச் மற்றும் செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்குச் சென்று திரும்பியுள்ளான். குறித்த இடங்கள் அனைத்தும் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகள் ஆகும்.

விசாரணையை திசை திருப்பவோ அல்லது அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் எப்படி உள்ளன என்பதை அறிய அவன் போயிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதில், டில்லி கார் குண்டுவெடிப்பின் முக்கிய ஆதாரமாக விசாரணைக் குழுவின் கைகளில் பதர்புர் டோல்கேட் சிசிடிவி கேமரா காட்சிகள் சிக்கியுள்ளது.  இந்த ஒரேயொரு தடயம் குண்டு வெடிப்பின் பின்னணியில் உள்ள அனைத்து விஷயங்களையும் வெளிக்கொண்டு வர காரணமாக இருந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terrorist Umar targeted 12 places in 6 districts of Delhi before Red Fort blast


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->