மீண்டும் தலைதூக்கும் பப்ஜி.! வெளியான அறிவிப்பால், ரசிகர்கள் எதிர்பார்ப்பு.!  - Seithipunal
Seithipunal


இந்திய - சீன எல்லையில் நடைபெற்ற பிரச்சனையில், 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு அடுத்தபடியாக சீன - இந்திய உறவில் விரிசல் பெரிதாக துவங்கியது. இந்த எல்லை பிரச்சனைக்கு முன்னதாகவே சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற பல குரல்கள் எழுந்து வந்தது. 

இதில், சீனா இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள பல செயலிகளின் மூலமாக, இந்திய அதிகாரிகள் மற்றும் மக்களின் செயல்பாடுகளை கவனித்து, தகவலை திருடுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில், எல்லையில் ஏற்பட்ட பிரச்னையை வைத்து சீன செயலிகளை முடக்க மத்திய அரசு திட்டம் தீட்டியது. 

இதன் முதற்கட்டடமாக ஏற்கனவே ஹெலோ, யூசி பிரவுசர், டிக் டாக் போன்ற பல செயலிகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பைடு, பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளை மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து பப்ஜி விளையாட்டு செயலியின் தாய் நிறுவனமான டென்சென்ட், "பயனாளர்களின் தகவல்கள் மற்றும் தரவுகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக தான் இருக்கிறோம். எங்கள் செயலி மீதான தடை உத்தரவை இந்தியாவில் நீக்கி, தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்" என்று கூறியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten cent will recover pubg in india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->