வீட்டிற்குள் விட்டதற்கு நாலு அடி.. மிஷன் பாஸுடு.. ரெஸ்பெக்ட் ப்ளஸ்.. பாலகிருஷ்ணாவின் பஞ்சாயத்துகள்.! - Seithipunal
Seithipunal


தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமதியின்றி தன்னுடன் செல்பி எடுத்த ரசிகர்களின் கன்னத்தை பதம் பார்த்த தெலுங்கு நடிகர் பாலையா என்ற பாலகிருஷ்ணா, மீண்டும் ஒரு அறை விட்டு அந்த போட்டோவை அழிக்க வைத்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

திரைத்துறையில் கிராபிக்ஸ் என்ற யுக்தியை எந்த அளவிற்கு தங்களால் உபயோகப்படுத்த முடியுமோ?, அந்த அளவிற்கு உபயோகம் செய்து தமிழக நெட்டிசன்கள் மத்தியில் மானாவாரியான கலாய்களை பெற்ற நடிகர் பாலையா. இவர் தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 

இவருடன் கூட்டத்தில் சிக்கினால் அடிவாங்காத நபர்களே இல்லை என்று கூறப்படும் நிலையில், அந்த அளவிற்கு அடிவாங்கினாலும் 60 வயதில் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் நிலை நிறுத்தியுள்ளார். இவர் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தப்பூர் மாவட்டத்தின் இந்துப்பூர் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். 

ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணா, சனிக்கிழமை காலை தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் வீட்டிற்குச் சென்றிருந்தார். இதன்போது, பாலகிருஷ்ணாவை பார்த்த பரவசத்தில் கட்சி பிரமுகர் ராஜாவின் சகோதரர் சோனு தனது செல்போனை எடுத்து தூரத்தில் இருந்தபடி செல்பி எடுத்துள்ளார். 

இதனை கவனித்த நடிகர் பாலகிருஷ்ணா சோமுவின் செல்போனை தட்டிவிட்டு, அவரது கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார். இதன் பிறகும் ஆத்திரம் தீராமல் செல்போனில் உள்ள தனது புகைப்படத்தை அழிக்க கோரி மீண்டும் அறைவிட்டார். 

விருந்துக்கு அழைத்த கட்சிப் பிரமுகரின் வீட்டிற்கு சென்று, அவரது தம்பிக்கு கன்னத்தில் அறை கொடுத்த பாலையாவின் ஆக்சன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது. ரசிகராக இருந்த பாவத்திற்கு வீட்டிற்கு அழைத்து, தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டு போல் இந்த சம்பவம் அமைந்தாலும், அடிவாங்கிய சோமுவை நான் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகர் என்றும், என் மீது அவர் கை பட்டதில் நான் பெருமை அடைகிறேன் என்றும் பேசவைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telugu Actor and MLA Balakrishna Slaps Supporter Brother Taking Selfie Without Permission


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->