பெண் மருத்துவர் என்கவுண்டரில் இதை கவனித்தீர்களா? கெத்து காட்டிய தெலுங்கானா போலீஸ்.!  - Seithipunal
Seithipunal


கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சம்சாபாத் என்ற இடத்தில் பெண் மருத்துவர் நான்கு பேர் கொண்ட கயவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அந்த இடத்திலையே உயிரின் எரித்துக் கொலை கொடூரமாக செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய தெலுங்கானா போலீஸ், பெண் மருத்துவர் கொலை வழக்கில் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் என நான்கு பேரை போலீசார் கைது செய்திருந்தது, இந்த குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டுமென இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

இதற்கிடையே, குற்றாவளிகள் நான்கு பேரையும் 7 நாள் காவலில் எடுத்து தெலுங்கானா போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே இன்று அதிகாலை குற்றம் நடந்த ஹைதராபாத் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 44ல் விசாரணை நடத்த குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் அழைத்து சென்றிருந்தனர், பெண் மருத்துவரை கொலை செய்தது எப்படி என்பதை பாலத்தின் அடியில் குற்றவாளிகள் நடித்து காட்டி கொண்டிருந்தனர். அப்போது குற்றவாளிகள் நான்கு பேரும் திடீரென போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்று உள்ளனர். அந்த சமயத்தில் அதைதடுக்க முயன்ற காவல்துறையினரை தாக்கிவிட்டு குற்றவாளிகள் 4 பேரும்  தப்ப முயற்சித்துள்ளனர், இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் சுட்டனர். போலீசார் சுட்டதில் அந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், குற்றவாளிகள் பெண் மருத்துவரை எந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றார்களோ, அதே இடத்தில் அந்த நான்கு பேரும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.  

பெண்மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றா அதே இடத்தில் வைத்து குற்றாவளிகளை என்கவுண்டர் செய்த தெலுங்கானா போலிஸிக்கும், தெலுங்கானா அரசுக்கும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telugana doctor rape case three culprits encounter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->