வெளுத்து வாங்கிய கனமழை.. மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம்.. பரிதவித்த மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வடமாநிலங்களில் பருவமழைக்காலமானது துவங்கவுள்ளது. இதன் முன்னெச்சரிக்கையாக பீகார், அசாம், டெல்லி, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. 

இதனால் எங்கும் பெருவெள்ளம், மழை என்று தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழை வெள்ளத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழையானது பெய்து வருகிறது. மேலும், அங்குள்ள கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூட உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரின் உஸ்மானியா பொது மருத்துவமனையில் கனமழை காரணமாக வெள்ள நீர் புகுந்துள்ளது. வெள்ள நீரில் நோயாளிகள் கட்டிலுக்கு மேல் அமர்ந்து இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana rain flood entered Hospital video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->