ஊரடங்கால் சோகம்.. வீதிக்கு வந்த தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலான நிலையில், ஊரடங்கு காரணமாக பல தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர். மேலும், புலம்பெயர்ந்து தொழில் செய்து வந்த பணியாளர்களும் கடுமையான அளவு பாதிக்கப்பட்டனர். மூன்றாவது ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. 

இருந்தாலும் கொரோனாவின் பரவல் அச்சம் காரணமாக மக்களால் இயல்பு நிலைக்கு திரும்ப இயலாத சூழல் ஏற்பட்டது. ஊரடங்கின் காரணமாக பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இணையத்தளம் மூலமாக மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருமானம் ஈட்டலாம் என்று ஆசிரியர்கள் முயற்சித்தாலும், பல காரணத்தால் மாணவர்களின் இணையவழி கல்வி தடைபட்டுள்ளது.

மேலும், இப்போதுள்ள சூழலில் மாணவர்கள் இணையவழியில் படிக்க துவங்கினாலும், பெற்றோர்களால் பணம் கட்ட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தை சார்ந்த கம்மம் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மரக்கனி ராம்பாபு தெரிவிக்கையில், ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டவுடன், பள்ளி நிர்வாகம் இப்போதைக்கு தலைமை ஆசிரியர் தேவையில்ல்லை என்று கூறிவிட்டனர். 

எனது இல்லத்தில் எனது வருமானம் மட்டுமே பிரதானமாக இருந்த நிலையில், மனைவியும் பணிகளுக்கு செல்லவில்லை. இதனால் கடந்த 5 ஆம் தேதி முதல் ரூ.2000 ஆயிரம் செலவில் வண்டி வாங்கி வீதி வீதியாக இட்லி விற்பனை செய்து வருகிறேன். மாதத்திற்கு ரூ.22 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த எனக்கு தற்போது தின வருவாயாக ரூ.200 கிடைக்கிறது என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana pvt School Head Master Sells Road shop food due to poor economy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->