ஒரு வினாடியில் 30 பேருக்கு சோதனை.. அசத்திய வெளிநாடு வாழ் இந்தியர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்தவர் புன்னா ரெட்டி. இவர் பொது இடங்களில் மக்களை சோதனை செய்யும் நேர விரயத்தை குறைக்கும் பொருட்டு, புதிய கருவியை வடிவமைத்துள்ளார். 

இந்த கருவி செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் நிலையில், வினாடிக்கு சுமார் 30 பேரின் உடல் வெப்பநிலையை கண்டறியலாம் என்றும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதிகளவு வெப்பநிலை உள்ளவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாத நபர்களை கண்டறியும் சோதனையில் இந்த கருவி வெற்றியடைந்துள்ளது. 

இதனையடுத்து இந்த கருவியை செகந்திராபாத் மற்றும் ஹைதராபாத் இரயில் நிலையத்தில் அமைத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக புன்னா ரெட்டி பேசிய சமயத்தில், தொழில் விஷயமாக இந்தியாவிற்கு வந்த நேரத்தில் கொரோனா எனக்கு உறுதியானது. இதன் பின்னர் சிகிச்சை பெற்று குணமானேன். இந்த விஷயத்திற்கு பின்னரே அதிகளவு நபர்களை கண்காணிக்க கருவியை கண்டறிந்து, வெற்றியடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana man discover kid thermo test


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->