33 வருடமாக தேர்வில் தோல்வி.. தூக்கிவிட்ட கொரோனா.. இளசுபோல துள்ளிகுதிக்கும் முதியவர்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறவில்லை. அந்தந்த மாநிலங்களை பொறுத்து 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 33 வருடமாக ஆங்கில தேர்வில் பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று வந்த 51 வயது முதியவர், கொரோனோவால் தேர்ச்சி பெற்று மகிழ்ச்சி அடைந்துள்ள சம்பவம் தெரியவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் பகுதியை சார்ந்தவர் நூருதீன் (வயது 51). இவர் கடந்த 1987 ஆம் வருடத்தில் 10 ஆம் வகுப்பு எழுதிய நிலையில், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. அடுத்தடுத்த தேர்வுகளில் தொடர்ந்து விண்ணப்பித்து தேர்வு எழுதிய நிலையில், 33 மதிப்பெண், 34 மதிப்பெண் என தொடர்ந்து தோல்வியை தழுவி வந்துள்ளார்.

இந்த வருடமும் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், அதிகாரிகள் அணைத்து தேர்வுகளையும் திரும்ப எழுத கூறியுள்ளனர். இதனையடுத்து ரூ.3 ஆயிரம் செலுத்தி தேர்வுக்காக காத்திருந்த நிலையில், கொரோனாவால் பத்தாம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நூருதீனும் அணைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்று, அம்மாநில முதல்வர் சந்திரசேகர்ராவ்க்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana grand fa pass after 33 Years in SSLC Exam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->