வீரமரணம் அடைந்த கர்னலின் மனைவிக்கு அளிக்கப்பட்ட பதவி.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முதல்வர்.!! - Seithipunal
Seithipunal


கல்வான் சண்டையில் பலியான கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷுக்கு துணை ஆட்சியர் பதவியானது தற்போது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி இந்திய லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற, சீன வீரர்கள் உடனான மோதலில் இந்தியப் படைவீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 

இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு வீரமரணம் அடைந்தார். அவருக்கு சந்தோஷி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். சந்தோஷ் பாபுவின் மறைவிற்குப் பிறகு அவரது வீட்டிற்குச் சென்ற தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், ரூ.5 கோடி நிதி உதவி செய்திருந்தார். மேலும், சந்தோஷ் பாபுவின் மனைவிக்கு ரூ.4 கோடியும், சந்தோஷ் பாபுவின் பெற்றோருக்கு ரூ.ஒரு கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 

இதுமட்டுமல்லாது ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் 700 சதுர அடி நிலமும் ஒதுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், சந்தோஷியை துணை ஆட்சியராக நியமத்து தெலுங்கானா மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இதற்கான உத்தரவை சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷியிடம் அம்மாநில முதல்வர் வழங்கியுள்ளார். பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள நிலத்திற்கான பட்டாவையும் வழங்கியுள்ளார். சந்தோஷி ஹைதராபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துணை ஆட்சியராக நியமனம் செய்யப்படுவர் என்றும், அவருக்கு முறையான பயிற்சி அளித்து பதவியில் அமரவைக்கபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Telangana CM Announce Colonel Sandhosh Babu wife Sub IAS post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->