கேரளாவிம் மீண்டும் தலை தூக்கும் வரதட்சணை கொடுமை.. சட்டகல்லூரி மாணவி தற்கொலை..! - Seithipunal
Seithipunal


வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் வசித்து வந்தவர் மோபியா பர்வீன். இவர் தொடுபுழாவில் உள்ள பகுதியில் உள்ள சட்ட கல்லூரியில் படித்து வருகிறார்.  இவருக்கு முகமது சுஹைல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

முகநூல் பழக்கத்திற்கு முன்னரே இரு வீட்டாரும் சம்மந்தம் பேசியுள்ளனர். ஆனால், அது தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் வெளிநாடு செல்வதாக முடிவு செய்திருந்தனர்.

மோபியா ஃப்ரீலான்ஸ் டிசைனராக வேலை செய்து வருகிறார். ஆனால், சுஹைன் சொன்னபடி வேலைக்கு செல்லாமல் மோபியா வருமானத்தில் வாழ்ந்துள்ளார். மேலும், திரைப்படம் எடுக்க விரும்புவதாகவும் அதற்கு 40 லட்சம் பணத்தை அவரது பெற்றோரிடம் இருந்து வாங்கி வர சொல்லி துன்புறுத்தியுள்ளார்.

ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 22 ம் தேதி இருகுடும்பத்தினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுதிர் மோபியா குடும்பத்தினரிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் அவர் தற்கொலைக்கு காரணமாக எனது சாவுக்கு கணவர் சுஹைல், அவரது பெற்றோர் யூசூப்- ருகியா, ஆலுவா போலீஸ் நிலைய  இன்ஸ்பெக்டர் சுதிர் ஆகியோர் தான் காரணம்

மேலும், அப்பா நீங்கள் சொன்னது சரி. சுஹைல் நல்லவன் கிடையாது எனவும் அவர் எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சுஹைல் மற்றும் பெற்றோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளரையும் கைது செய்ய  கோரி போராட்டம் நடத்தி வருகினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teen commits suicide due to dowry abuse in Kerala


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->