பாராட்டு மழையில் நனையும் இந்தியா... நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்த உலக சுகாதார அமைப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிட்ஷீல்ட் கொரோனா தடுப்பூசி மருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நான்கு கட்டங்களாக மருந்துகளை செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிட்ஷீல்டு மருந்தை சீரம் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், கோவேக்சின் தடுப்பூசி பாரத் பயோடெக் நிறுவனத்தால் முதல் தடுப்பு மருந்தாக இந்தியாவில் தயார் செய்யப்பட்டுள்ளது. 

தடுப்பூசியை தயார் செய்யும் நாடுகளில் முன்னணி நாடாக இருந்து வரும் இந்தியா, பலநாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசியை நல்லெண்ண அடிப்படையிலும் வழங்கி வருகிறது. பிரேசில், பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் செயலுக்கு அந்தந்த நாடுகளின் தலைவர்கள் மட்டுமல்லாது, உலக நாடுகளின் தலைவர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்தியாவை பாராட்டியுள்ளது. 

இது தொடர்பாக தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம், " கொரோனாவிற்கு எதிரான உலக நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கி வரும் இந்தியாவிற்கும், இந்தியாவின் பிரதமர் மோடிக்கும் நன்றிகள். தகவலை பரிமாறிக்கொள்ளுதல், இணைந்து செயல்படுதல் மூலமாக மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தி மனித உயிர்களை காக்க இயலும், வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tedros Adhanom Thanks to India and Prime Minister Modi about corona vaccine supply other countries


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->