மாணவர்கள்  முன்னிலையில் ஆசிரியர் செய்த வேலை.! வீடியோ போட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!  - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில், பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் புகைப்பிடிக்கும் வீடியோ வைரலானது. இதை தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மஹ்முதாபாத் நகரில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளி ஒன்றின் வகுப்பறையில் மாணவர்களின் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் புகைபிடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதுகுறித்து பலரும் சமூகவலைத்தளங்களில் வசைபாடினார்கள். 

இந்த காட்சி வகுப்பறையில் இருந்த ஒருவரால் படம்பிடிக்கப்பட்டு, அதை இணையதளத்தில் பரப்பப்பட்டது. மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கின்ற செயலை மேற்கொண்ட அந்த ஆசிரியரை, பணியில் இருந்து நிக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், வைரலான வீடியோவின் நம்பகத் தன்மையை அவர்கள் ஆய்வு செய்ததாகவும், நடந்த அந்த சம்பவம் உண்மையானது தான் என்று உறுதிசெய்யப்பட்டது, இதை அடுத்து, தொடர்புடைய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher smoking in front of students in classroom


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->