#வீடியோ: தாரை தப்பட்டை முழங்க தமிழகத்தின் சார்பில் கம்பீரமாக வலம் வந்த அய்யனார் சிலை.! - Seithipunal
Seithipunal


71-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, முப்படை வீரர்களின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

இந்திய ராணுவத்தின் வலிமையையும், பெருமையையும் பறைசாற்றும் வகையில் ராணுவத்தின் முப்படை அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் விதமாக அலங்கார வாகனங்கள் மற்றும் பல மாநிலத்தின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வந்தன. அதில் பாரம்பரிய முறைப்படி தாரை தப்பட்டை முழங்க தமிழகத்தின் சார்பில் அய்யனார் சிலை அணிவகுத்து வந்தன.

இந்த விழாவை கண்டுகளிப்பதற்காக ராஜபாதையில் பல லட்ச கணக்கான மக்கள் திரண்டனர். டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரேசில் அதிபர் போல்சனரோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். குடியரசு தின விழாவையொட்டி தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதேபோல் அந்தந்த மாநிலங்களிலும் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில், ஆளுநர்கள் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu traditional god in republic day celebration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->