தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை - மத்திய அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இலங்கை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பகுதியை சார்ந்த 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். ivargal கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருக்கையில், அங்கு வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் மரியசிங்கம் மற்றும் சுப்பிரமணியனின் விசைப்படகுகளை சிறைபிடித்தனர். 

மேலும், படகுகளில் இருந்த 20 மீனவர்களை துப்பாக்கி முனையில் கைது செய்த நிலையில், பிற படகுகளை விரட்டியடித்துள்ளனர். மேலும், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியை சார்ந்த 34 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர். 

கைதாகிய 54 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் மற்றும் திரிகோணமலை முகாம்களுக்கு அழைத்துச்சென்ற நிலையில், அவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த விஷயம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், மீனவ அமைப்பினர் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் இலங்கையில் இருக்கும் தூதரக அதிகாரிகள் மீனவர்கள் விடுதலையாக நடவடிக்கை எடுத்த நிலையில், இலங்கை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து நல்லென்ன அடிப்படையில் 40 மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. 

மீதமுள்ள 14 காரைக்கால் மீனவர்கள் விடுதலை தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலையாகியுள்ள தமிழக மீனவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் இராமேஸ்வரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: இந்தியா உட்பட தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள். தனித்திருங்கள்.. விலகியிருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Rameswaram Fishermen Arrest by Srilankan Navy They Are Released and Return Day After


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->