போதை வஸ்துக்களுக்கு கோடிக்கணக்கானவர்கள் அடிமை.. உ.பியில் கோரத்தாண்டவம்.. தமிழகத்தில் எத்தனை இலட்சம் தெரியுமா?.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 90 இலட்சத்திற்கும் அதிகமானோர் மது அருந்தும் பழக்கத்தை வைத்திருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடரில் பாராளுமன்ற உறுப்பினர் நாட்டில் மதுப்பழக்கம், கஞ்சா, போதை மாத்திரை போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாக உள்ளவர்கள் எத்தனை பேர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இதற்கு, சமூக நீதி அமைச்சகம் இந்தியாவில் சுமார் 15 கோடியே 1 இலட்சத்து 16 ஆயிரம் பேர் மதுபானம் அருந்துவதாக அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சமூக நீதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், " இந்தியா முழுவதும் சும்மர் 15 கோடியே 1 இலட்சத்து 16 ஆயிரம் பேருக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளது. 

இவர்களில் உத்திரபிரதேசம் மாநிலத்தவர்கள் அதிகளவு மதுபானத்திற்கு அடிமையாகியுள்ளனர். அம்மாநிலத்தில் 3 கோடியே 86 இலட்சத்து 11 ஆயிரம் பேரிடம் மதுப்பழக்கம் உள்ளது. தமிழகத்தில் சுமார் 90 இலட்சம் பேர் மதுபானத்திற்கு அடிமையாகியுள்ளனர்.

இந்தியா முழுவதும் 2 கோடியே 90 இலட்சம் பேர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலத்தில் அதிகபட்சமாக 1 கோடியே 20 இலட்சத்து 31 ஆயிரம் பேர் கஞ்சாவுக்கு அடிமையாகி இருக்கின்றனர். தமிழகத்தில் 1 இலட்சத்து 4 ஆயிரம் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளனர். 

இந்தியாவில் 1 கோடியே 86 இலட்சத்து 44 ஆயிரம் பேர் போதை மாத்திரை பயன்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில், 1 இலட்சத்து 54 ஆயிரம் பேர் போதை மாத்திரைக்கு அடிமையாகியுள்ளனர். போதை பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்டெடுக்க 8 ஆயிரத்திற்கும் அதிகமான தன்னார்வலர்கள் உள்ளனர். 850 க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையம் உள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸின் வீரியத்தை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Drug Liquor Kanja Addition List by Central Govt 21 July 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->