பிரபல நடிகர் மீது வரி ஏய்ப்பு குற்றப்பத்திரிகை தாக்கல்.! போலீசார் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


மலையாள நடிகர் சுரேஷ்கோபி மீது சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு செய்ததாக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. 

தமிழில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, அஜித்குமார் நடித்த தீனா, சரத்குமாரின் சமஸ்தானம், விக்ரமின் ஐ என பல படங்களில் நடித்து இருக்கின்றார். சில வருடங்களுக்கு முன்பு சுரேஷ் கோபி, 60 லட்ச ரூபாய் மற்றும் 80 லட்ச ரூபாய் மதிப்பில் 2 சொகுசு கார்களை வாங்கி இருக்கின்றார். 

அந்த கார்களை சுரேஷ் கோபி புதுச்சேரியில் பதிவு செய்து இருந்தார். புதுச்சேரியில் வசிப்பதாக போலியான ஆவணங்களை காட்டி காரை பதிவு செய்ததாக கூறப்படுகின்றது. இதன் மூலமாக 19 லட்ச ரூபாய்க்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து கேரள குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் சுரேஷ் கோபியை கைது செய்துள்ளனர். பின்னர் சுரேஷ் கோபி ஜாமீனில் விடுதலையாகி இருந்தார். இந்த வழக்கில் தற்போது காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suresh gopi faces tax evasion


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->