உச்சநீதிமன்றம் அளித்த அதிர்ச்சி தீர்ப்பு! நாடு முழுவதும் உண்டான சலசலப்பு!  - Seithipunal
Seithipunal


மாநில அரசு பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை, பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது அனைத்து மாநிலங்களிலும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. 

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல், காலிப்பணியிடங்களை நிரப்பும் உத்தரகாண்ட் அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் அரசாணையை ரத்துசெய்து, குறிப்பிட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உத்தரகாண்ட் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மாநில அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு கேட்பதற்கு எந்தவொரு தனி நபருக்கும் எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும் தீர்ப்பு அளித்தனர். அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும், இதேபோன்று பதவி உயர்வுகளிலும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகள் கட்டுப்படத் தேவை இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், மாநில அரசு இடஒதுக்கீடு ஏற்பாடுகளை செய்ய விரும்பினால், அரசு பணிகளில் அந்த சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் போதாது என்பதை காட்டுவதற்கான தரவுகளை சேகரிக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணியிடங்களை நிரப்புவதிலும், பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களிலும் இருந்தும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court verdict about reservation for job promotions


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->