நாட்டின் அத்தனை கட்சிகளையும் பதறவைத்த உச்சநீதிமன்றம்! 48 மணி நேரம் கெடு விதித்து அதிரடி!  - Seithipunal
Seithipunal


குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்ததற்கான காரணத்தையும், வேட்பாளர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரத்தையும் அரசியல் கட்சிகள், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணிநேரத்துக்குள் இணையதளம், சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளது. 

பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயே கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் குற்ற பின்புலம் குறித்து மக்களுக்கு ஊடகங்களிலும், நாளேடுகளிலும் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பிறப்பித்த உத்தரவில், "அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும்போது தங்களின் குற்றப்பின்னணி குறித்து நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டது. 

தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தெளிவில்லாமல் இருக்கிறது எனவும், வேட்பாளர்கள் தங்கள் குற்றப்பின்னணி குறித்து எத்தனை நாட்களுக்குள் தெரிவித்து விளம்பரம் வெளியிட வேண்டும் என்ற தெளிவான உத்தரவு இல்லை. அதேபோல மக்கள் கவனத்தில் இல்லாத நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் வேட்பாளர்கள் விளம்பரம் செய்து தப்பிக்கிறார்கள். அதனை சரிசெய்ய புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என அஸ்வினி உபாத்யாயே கோரியிருந்தார். 

இது தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் அஸ்வினி உபாத்யாயே தொடர்ந்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் பாலி நாரிமன், ரவிந்திர பாட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவானது, அரசியல் கட்சிகள் வேட்பாளர்களைத் தேர்வு செய்தவுடன் அவர்கள் மீது நிலுவையில் இருக்கும் குற்றப்பின்னணி வழக்குகள், விவரங்களை தங்கள் கட்சியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், அதுமட்டுமல்லாமல் குற்றப்பின்னணி வழக்குகள் நிலுவையில் இருக்கும் அந்த வேட்பாளர்களை ஏன் தேர்வு செய்தோம் என்பதற்கான காரணத்தையும் கட்சியின் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணிநேரத்துக்குள், உள்ளூர் நாளேடு, தேசிய நாளேடு, முகநூல் உள்ளிட்ட ஊடகங்களில் தங்கள் வேட்பாளர்கள் குறித்த விவரத்தையும், அவர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்தும் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் எனவும், வெளியிட்ட விவரங்கள் குறித்த பட்டியலை 72 மணிநேரத்துக்குள் தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் ஒப்படைக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாத பட்சத்தில் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court to political parties to upload on their websites the reasons for selection of candidates with criminal antecedents.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->