பிரதமர் மோடி அமித்ஷா மீது நடவடிக்கை! உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!  - Seithipunal
Seithipunal


தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மீது காங்கிரஸ் கட்சி  தேர்தல் ஆணையத்தில் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வந்து கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா மீது காங்கிரஸ் அளித்த புகார் குறித்து வருகின்ற 6ம் தேதிக்குள் முடிவெடுத்து உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இருவருக்கும் எதிராகவும் காங்கிரஸ் கட்சி தரப்பில் 9 புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆரம்பம் முதலே தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர்கள் மீதான வழக்குகள் முடிவினை திங்கள்கிழமை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court order election commission of India


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->