கொரோனா பரவல் எதிரொலி., உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா நோய் தொற்றின் தீவிரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றன.

மேலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

அதே சமயத்தில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் தொடர்ந்து 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின்படி, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நேற்றுமுதல் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. 

இந்தியாவில் இதுவரை 10.45 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும், இந்தியாவில் ஒரே நாளில் 29.33 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் பெரும்பாலான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால், வழக்குகளை காணொலி மூலம் விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court online case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->