கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 லட்சம் இழப்பீடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு - Seithipunal
Seithipunal


கோத்ரா கலவரத்தின் போது ஒரு கும்பலால் கற்பழிக்கபட்ட பெண்ணுக்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வேலை வழங்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது குஜராத்தில் 2002ஆம் ஆண்டு கோத்ரா கலவரம் ஏற்பட்டது அப்போது ஒரு கும்பல் ஒரு பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கொலை செய்துவிட்டு அந்தப் பெண்ணையும் கற்பழித்தது 

இந்த வழக்கில் தனிக்கோர்ட்டு 2008 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி தீர்ப்பு வெளியிட்டது அதில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் சில போலீசார் டாக்டர்கள் உட்பட 7 பேரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது பின்னர் பாம்பே ஐகோர்ட்டிலும் இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நடைபெற்றது. 

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
பாம்பே ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது முன்னதாக இந்த வழக்கில் தவறிழைத்த ஐபிஎஸ் அதிகாரி உட்பட போலீஸ் அதிகாரிகள் மீது இரண்டு வாரத்துக்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது 

மனுதாரர் தரப்பில்  குஜராத் மாநில அரசு தனக்கு வழங்குவதாக அறிவித்த ரூபாய் 5 லட்சம் ரூபாயை என்னால் ஏற்க முடியாது தனக்கு  கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது 

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதி நீதிபதிகள் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குஜராத் மாநில அரசு ரூபாய் 50 லட்சம் இழப்பீடு வேலை மற்றும் வீடு வழங்க வேண்டும் குஜராத் மாநில அரசு தவறு இழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க கூடாது பாம்பே ஹைகோர்ட் தண்டனை விதிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியை இரண்டு தகுதிகள் பதவி இறக்கம் செய்ய வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SUPREME COURT JUDGEMENT TO RAPE CASE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->