இன்ஜினீயர் தேர்வில் முதலிடத்தில் சன்னிலியோன்! வெளியான பட்டியலால் குழம்பிப்போன அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான , ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில் பொது சுகாதார பொறியியல் துறையில், இளநிலை இன்ஜினியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், 214 பணியிடங்களுக்கு, 17,911 பேர் தேர்விற்காக விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் கல்வித் தகுதி, பணி அனுபவம் அடிப்படையில், இரண்டாம் கட்டத் தேர்வுக்கு 642 பேர் தேர்வுசெய்யப்பட்டு, அத்தகைய  தகுதிப் பட்டியல், பொது சுகாதார பொறியியல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், 98.5 சதவீத மதிப்பெண்களுடன், ஐந்து ஆண்டுகள் தொழில் அனுபவம் உள்ளவர் என  பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெயர் இடம்பெற்றுள்ளது. 

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து, பொது சுகாதார பொறியியல் துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தப் பட்டியலில் சில குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. நடிகை சன்னி லியோனின் பெயர் எப்படி வந்தது என தெரியவில்லை. 

மேலும் தவறுகளை திருத்திக் கொள்ளவும், தகவல்களை சரிபார்க்கவும், விண்ணப்ப தாரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் சரியான  புதிய பட்டியல் வெளியிடப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sunny leone name in engineer exam at bihar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->