பசு மாட்டின் சாணம், சிறுநீர் தொடர்பான தொழில் முனைவோருக்கு நிதி உதவி!! - Seithipunal
Seithipunal


பால் பொருட்களைத் தவிர்த்து, பசு மாட்டின் சாணம், சிறுநீர் போன்றவற்றையும் சந்தைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது அந்தவகையில் வேளாண் துறையின் கீழ் ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்க்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு தலைவராக வல்லாப் கத்திரியா என்பவர் நியமிக்கப்பட்டார். 

இந்தநிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கத்திரியா, பசு மாட்டுச் சாணம், சிறுநீர் போன்றவை மருத்துவம் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுவதால் அது தொடர்பான தொழில் தொடங்குவோருக்கு 60 விழுக்காடு நிதி உதவி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் பசு மாட்டின் கழிவுகளில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள நிதியுதவி செய்யப்படும் என்றும், ஏற்கெனவே நடத்தப்பட்டு வரும் கோசாலைகளில், பசு வளர்ப்போருக்கும், உரிமையாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க முடிவெடுத்துள்ளதாக வல்லாப் கத்திரியா கூறியுள்ளார்.

இதன் மூலம், பால் வியோகம் நிறுத்தும் பசுக்கள் நிராகரிக்கப்படுவது தடுக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள உள்நாட்டு இன பசுக்கள் நிறைந்தள்ளது. இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து, பசு சுற்றுலா சர்கியூட் உருவாக்கும் என்ற புதிய திட்டத்தையும் அவர் அறிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

subsidy for cow scheme


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->