இந்தியாவின் புரட்சி நாயகன் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று.! - Seithipunal
Seithipunal


இந்திய சுதந்திரத்தை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு அயராது பாடுபட்ட புரட்சி வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஒரிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார்.

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தவர், குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே ஆசிரியருடன் சண்டை ஏற்பட்டு கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.

பின்பு சி.ஆர்.தாஸ் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து ஐ.சி.எஸ். (Indian Civil Services) பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து கொண்டிருந்தார். நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை பார்க்கக்கூடாது என்ற எண்ணத்தில் அந்தப் பதவியை துறந்தார். அந்த வேலையை விட்டு விட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இவர் 1941ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் என்ற ரேடியோ மையத்தை நிறுவி, நாட்டுக்கெனத் தனிக்கொடியை அமைத்து, ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பெண்களுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்கு ஜான்சி ராணிப் படை என்று பெயரிட்டார்.  இந்திய புரட்சி நாயகர் சுபாஷ் சந்திர போஸ் 1945ஆம் ஆண்டு மறைந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

subhas chandra bose birthday 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->