மாதவிடாய் பெண்களை உள்ளாடையை கழற்ற சொல்லி, தண்டிக்கும் கல்லூரி.! மாணவிகள் கதறல்.! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் இருக்கும் ஸ்ரீ சஹ்ஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனம் (எஸ்.எஸ்.ஜி.ஐ) செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் பி.காம், பி.ஏ., பி.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகள் படிக்கலாம். மொத்தமாக 1,500 பேர் இந்த கல்வி நிறுவனத்தில் படித்து வருகின்றனர். தொலைவில் இருந்து வந்து படிக்கும் மாணவிகள் விடுதியில் தங்கி இருக்கின்றனர். 

விடுதியில் இருக்கும் வழிபாட்டு அறைக்கு மாதவிடாய் நாட்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல மாதவிடாய் காலங்களில் பிற பெண்களை தொடவும் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், இதனை சில மாணவிகள் மீறுவதாக முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. 

இதுகுறித்து அந்த மாணவிகள், கண்ணீர் மல்க, " முதல்வர் அழைப்பதாக கூறி அனைவரையும் அழைத்துச் சென்றனர். அங்கே அவர் எங்களை மோசமாக திட்டினார். பின்னர் யாருக்கு மாதவிடாய் என்று கேட்க இருவர் விலகி நின்றனர். இருப்பினும், எங்கள் அனைவரையும் கழிவறைக்கு அழைத்து சென்றனர். 

அங்கே உள்ளாடைகளை கழற்றச் சொல்லி மாதவிடாய் இருக்கிறதா? என பரிசோதனை செய்தனர். பல நேரங்களில் மாதவிடாய் பிரச்சனையை முன்வைத்து கல்லூரி முதல்வர் மற்றும் சில ஊழியர்கள் மோசமாக நடந்து கொள்கின்றனர். எங்களுக்கு தண்டனையும் கொடுக்கின்றனர்." என மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

students punished by collage principle


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->