ஸ்கூல் பீஸ் கட்டாத மாணவர்களை நாள் முழுவதும் வெயிலில் நிற்க வைத்த கொடூரம்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஸ்கூல் பீஸ் கட்டாத மாணவர்களை வெயிலில் நிற்க வைத்ததில் மாணவர்கள் அழும் வீடியோ வைரலாகி வருகிறது.

உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் மிகவும் தீவிரமாக காட்டி வருகிறது.

இந்த நிலையில் சில மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகம் மாணவர்களை தேர்வு எழுத விடாமல் வெயிலில் நிற்க வைத்துள்ளது. இதனால் மாணவர்கள் அழுது கொண்டே நின்று உள்ளனர் இதனை அங்கிருந்து சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் சிறுமி ஒருவர் என்னுடைய தந்தை என்று கட்டணம் செலுத்தி விடுவதாக என்னிடம் கூறினார். இதை தான் என்னுடைய ஆசிரியரிடம் கூறிய போது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அழுது கொண்டே கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோவை பார்த்த சிலர் மாணவர்களின் வெளியே நிற்க வைத்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students away in the class room for don't pay school fees


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->