கொரோனா தீவிரம் : ஸ்டாலின், தயாளுவை நலம் விசாரித்த மோடி!   - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலாக அதிகரித்து வரும் நிலையில்,  கடந்த 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் 5 உறுப்பினர்களுக்கும் மேல் வைத்துள்ள கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து 24 உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு க ஸ்டாலினை  தொடர்பு கொண்டு பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். 

அதேபோல அவரது தாயார் தயாளு அம்மையார் உடல் நலம் குறித்து விசாரித்தார். பதிலுக்கு மு க ஸ்டாலின் பிரதமர் மோடியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஸ்டாலின் உடல் நலம் குறித்து விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

பின்னர் ஸ்டாலின் தெரிவித்துள்ள தகவலில், ஏப்ரல் 8 ஆம் தேதி மத்திய அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக  கண்டிப்பாக பங்கேற்கும் எனவும், திமுக சார்பில் டி ஆர் பாலு கலந்து கொள்வார் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் பிரதமர், மத்திய அரசு அரணாக இருக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin announced dmk will participate all party meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->