திடீரென தள்ளிப்போன கங்குலி டிஸ்சார்ஜ், காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக, கடந்த 2 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

இந்திய கிரிக்கெட் வீரர்களில் புகழ் பெற்ற வீரர்களில் ஒருவரான கங்குலி, தற்போழுது பிசிசிஐ தலைவராகவும் இருந்து வருகிறார். தாதா, கொல்கத்தா இளவரசர் என அன்புடன் அழைக்கப்படும் இவருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவர் ஆறாம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முழுமையாக குணமடைந்து விட்ட கங்குலி, நன்றாக பேசுவதாகவும் உணவுகளை உட்கொள்வதாகவும் தெரிவித்த மருத்துவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அறிவித்தனர். ஆனால் திடீரென மேலும் ஒருநாள் மருத்துவமனையில் இருக்க கங்குலி விருப்பப்பட்டதால், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sourav Ganguly Discharge Late Reason


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->