கொரோனா காலத்தில் ஓடி ஓடி உதவிய சோனு சூட்! அழுது கண்ணீரில் மிதக்கும் வீடியோ! பின்னணி என்ன?!  - Seithipunal
Seithipunal


கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் உண்மையான கதாநாயகனாக பார்க்கப்படுபவர் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். ஆதரவற்ற பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர் சேவையாற்றி வருவதையடுத்து சோனு சூட் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்துவிட்டார்.

ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்தார். வாழ்வதாரத்திற்காக சாலையில் சிலம்பம் சுற்றி பிழைத்து வந்த 85 வயது மூதாட்டியை தற்காப்பு கலை பயிற்சியாளராக மாற்றினார். 

இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலையிழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். 

சோனி டிவி கபில் சர்மா தொகுத்து வழங்கும் பிரபல பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் சோனு சூட். சோனி டிவி அந்த நிகழ்ச்சியின் சில நிமிட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. 

அந்த வீடியோவில், சோனு சூட் மூலம் உதவி பெற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவருக்கு உருக்கமாக நன்றி தெரிவிக்க,  இந்த வீடியோவை பார்த்த நடிகர் சோனு சூட் நிகழ்ச்சி மேடையிலேயே கண்கலங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonu sood crying in television program


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->