நள்ளிரவு வீடு வந்த மகன்., ஒற்றை கேள்வியில்., உயிரை பறிகொடுத்த தாய்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகரில் ஒரு தாய் மகன் இருவரும் தனியே வசித்து வந்து உள்ளனர். அந்த இளைஞன் ஒரு கல்லூரி மாணவர் . அவன் தினமும் தனது கூட்டாளிகளோடு தங்கி விட்டு இரவு வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வருவார் என தெரிகிறது. இதன் காரணமாக அந்தத் தாய் தன் மகனிடம் இப்படி அடிக்கடி இரவில் வெளியே சுற்றிவிட்டு நேரமாகி வீட்டிற்கு வருகிறாயே இது உனக்கே சரியாக படுகிறதா என கண்டித்துள்ளார்,

இதன் காரணமாக அந்த இளைஞர் தன்னுடைய தாயிடம் தாம் இனிமேல் இரவு நேரங்களில் அடிக்கடி வெளியே போக மாட்டேன் எனவும், விரைவில் வீட்டிற்கு வந்து விடுவதாகவும் கூறியுள்ளார். அதன்பிறகு வந்த நாட்களில் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வந்துள்ளார்.

சென்ற புதன்கிழமை அந்த இளைஞன் மீண்டும் இரவு நேரத்தில் தன் கூட்டாளிகளோடு ஊர் சுற்றிவிட்டு இரவு 12 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து கதவினை தட்டி உள்ளார். இந்தநிலையில் அந்த தாய் திரும்பவும் இவ்வாறு இரவு நேரத்தில் ஊர் சுற்றுகிறான் என்று அந்த இளைஞருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக சற்று நேரம் கழித்து வந்து கதவினை திறந்து உள்ளார். இதனால் அந்த இளைஞன் கோபமுற்று அந்த தாயிடம் கதவை திறக்க இவ்வளவு நேரமா ஏன் இவ்வாறு தூங்குகிறாய் என்று வாக்குவாதம் செய்து உள்ளார்.

இதனைக் கேட்டு கோபமடைந்த அந்த தாய், கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வரும் இந்த நேரத்தில் நீ இவ்வாறு ஊர் சுற்றிவிட்டு நள்ளிரவில் வருகிறாயே? உனக்கே இது நியாயமாக படுகிறதா? என வினவியுள்ளார். இதன் காரணமாக கோபமடைந்த அந்த இளைஞன் தன் தாய் என்று கூட பார்க்காமல் அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால், சம்பவ இடத்திலேயே அவர் துடிக்கத் துடிக்க இறந்துபோனார். அதன்பிறகு அருகில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

son killed mother


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->