ஆர்எஸ்எஸ் வரலாற்றில் தலைமை விருந்தினராக பங்கேற்ற முதல் பெண்! அமைதி, சகோதரத்துவம், நட்புறவு பக்கத்தில் ஆர்எஸ்எஸ் நிற்கிறது! - Seithipunal
Seithipunal


சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் நாங்கள் என சிலர் பயமுறுத்துகின்றனர்! எங்களின் இயல்பு அதுவல்ல!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஆயிரக்கணக்கான அரசு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்எஸ்எஸ் வரலாற்றில் முதன்முதலாக தலைமை விருந்தினராக ஒரு பெண் பங்கேற்றார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் என்ற பெருமை பெற்ற சந்தோஷ் யாதவ் சிறப்பு தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் "பெண்களுக்கு நாம் அதிகாரம் அளிக்க வேண்டும். பெண்கள் இல்லாமல் சமுதாயம் வளர முடியாது. நமது பெருமையும் நம்பகத்தன்மையும் உலக அளவில் வளர்ந்துள்ளது. இலங்கைக்கு செய்த உதவி மற்றும் ரஷ்யா-உக்ரைன் இடையிலான மோதலின் நமது நிலைப்பாடு ஆகியவை நமது குரல்கள் உலக அளவில் கேட்கப்படுகிறது என்பதை காட்டுகிறது.

இந்திய பொருளாதாரம் மென்மேலும் வளரும் என சர்வதேச பொருளாதார நிறுவனங்கள் கருதுகின்றனர். நமது பொருளாதாரம் கோவிட்டிற்கு முந்தைய நிலைக்கு திரும்பி உள்ளது. மாற்றம் என்பது உலகத்தின் நியதி. ஆனால் சனாதன தர்மத்தில் உறுதியாக இருக்க வேண்டும். 

எதிர்காலத்திற்கு ஆங்கிலம் தேவை என்பது என் நம்பிக்கை. புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களை பண்பட்டவர்களாகவும் தேசபக்தியால் ஈர்க்கப்பட்ட நல்ல மனிதர்களாகவும் மாற்ற வழிவகுக்கும். குற்றங்களுக்கு எதிராக சட்டத்துக்கு உட்பட்டு மக்கள் குரல் எழுப்ப வேண்டும். தவறுக்கு எதிராக ஒருவர் குரல் எழுப்புவது சாதாரணமாக மாற்ற வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

மதரீதியான மக்கள் தொகை சமநிலை இன்மை முக்கியமான விஷயம். இதனை புறக்கணிக்க வேண்டும். மக்கள் தொகை சம்பந்தப்பட்ட தன்மை புவியியல் ரீதியல் எல்லைகளை மாற்ற வாய்ப்பு உள்ளது. இறப்பு விகிதங்களில் மாறுபாடு உள்ள நிலையில் வலுக்கட்டயமாக, கவர்ச்சி மற்றும் ஆசை காட்டி மதம் மாற்றுவது முக்கிய காரணங்களாக உள்ளன.

ஹிந்து ராஷ்ட்ரியம் என்ற கருத்து அனைத்து மட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. இந்த கருத்தை பலர் ஆதரித்தாலும் ஹிந்து என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதற்கு பதில் மாற்று வார்த்தையை கண்டுபிடிக்கும் படி கூறுகின்றனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஹிந்து என்ற சொல்லை நமக்கு நாமே வலியுறுத்தி கொண்டே இருப்போம்.

கோவில், தண்ணீர், மயானம் ஆகியவை அனைவருக்கும் பொதுவானவை. சிறிய விஷயங்களுக்காக நாம் மோதிக்கொள்ளக்கூடாது. எங்களால் சிறுபான்மையினருக்கு ஆபத்து என சிலர் பயமுறுத்துகின்றனர். இது ஆர்எஸ்எஸ் அமைப்பு அல்லது இந்துக்களின் இயல்பு கிடையாது. சகோதரத்துவம் நட்பு மற்றும் அமைதியின் பக்கம் நிற்க ஆர்எஸ்எஸ் உறுதி கொண்டுள்ளது" என ஆர்எஸ்எஸ் பொதுக் கூட்டத்தில் மோகன் பகவத் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Some fear that RSS was anti minority That is not our nature


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->