பிரதமர் மோடி மீது வழக்கு தொடுத்த சமூக செயற்பாட்டாளர் கைது.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடிக்கு எதிராக போலி வழக்கு தொடுத்தவரை அகமதாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நேற்று முன்தினம் அளித்தது. 

இந்த வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என தீர்ப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், குஜராத் கலவர வழக்குகளில் பிரதமர் மோடி விடுதலை செய்யப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, பிரதமர் மோடி மீது போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை அகமதாபாத் போலீசார் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social activist arrested for filing case against PM Modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->