வகுப்பரையில் ஆசிரியர் செய்த செயல்..! பரிதாபமாக உயிரிழந்த சிறுமி.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் இருக்கும் கோழிக்கோடு பகுதியில்  10 வயது சிறுமி ஒருவருக்கு பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறுமி ஷெரின் நேற்று வழக்கம்போலவே வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டே இருந்துள்ளார். அப்போது எங்கிருந்தோ வகுப்பறைக்குள் புகுந்த பாம்பு ஒன்று சிறுமியை கடித்து விட்டு ஓடிவிட்டது. உடனடியாக சிறுமி தன்னுடைய ஆசிரியரை அழைத்து பாம்பு கடித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், மாணவியின் காயத்தை கண்ட ஆசிரியர் அது பாம்பு கடித்ததால் வந்த காயம் இல்லை என்று கூறி அவரை மீண்டும் அங்கேயே அமர வைத்துள்ளார். அதன்பின்னர், கடித்த இடத்தில் நீல நிறமாக மாறுவது குறித்து அந்த சிறுமியின் தோழிகள் கூறிய பின்னர் தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிறுமியின் பெற்றோருக்கு போன் செய்து வரச் சொல்லி இருக்கின்றார். இது குறித்து தெரிந்து கொண்ட தந்தை உடனடியாக மருத்துவமனையில் தன்னுடைய மகளை அனுமதித்தார். அங்கேயும் அதற்குள்ளாக விஷம் உடல் முழுவதும் பரவி விட்டதாக கூறி வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறியிருக்கின்றனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி ஆசிரியர்களின் இந்த பொறுப்பில்லாத நடவடிக்கைகளே சிறுமியின் இறப்பிற்கு காரணம் என்று தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snake bite student in kerala


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->