கடலூர் || பள்ளிகளில் புகை மருந்து அடிக்கும் பணி தீவிரம்..! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. 

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகள் கூட்டம் அலைகடல் போல் திரள்கிறது. மருத்துவமனைக்கு வருபவர்களில் சிறுவர்களே அதிகளவில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இம்மாவட்டத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலை தடுக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்டமாக காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் கடலூரில் உள்ள பள்ளிகளில், மாணவர்களை வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டு, புகை மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதுமட்டுமின்றி, மாவட்டத்தில் காய்ச்சல் அதிகம் உள்ள கிராமங்களிலும் புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மாணவர்கள் இடையே காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Smoking medicine apply in schools


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->