"இந்திய நாடு தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பானது" இஸ்லாமிய பெண் ஒருவர் அசத்தல்.! - Seithipunal
Seithipunal


"தனியாக சுற்றுலா செல்ல அல்லது பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு நாடு என்றால் அது இந்தியாதான்" என்று உணர்த்தும் வகையில், தனி பயணம் ஒன்றை இஸ்லாமிய பெண் ஒருவர் மேற்கொண்டுள்ளார்.

'மாகே' யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் நஜீரா நவுஷத் (33 வயது). இவர் பிரபல பயண வலைப்பதிவராக வளவந்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், நஜீரா நவுஷத் "இந்திய நாடு தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பானது" என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து, 50 நாட்கள் தனிச் சுற்றுலாவாக பயணம் செய்து வருகிறார்.

நஜீரா நவுஷத், கேரளாவின் குட்டநாடு பகுதியில் இருந்து, நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரம் வரை இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்த நெடுந்தூர பயணத்தைத் ரயில், பேருந்து, விமானம் மூலம் பயணம் செய்யாமல், வழியில் கிடைக்கும் வாகனங்களில் பயணித்து, பயண தூரத்தை முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசம் உட்பட 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நஜீரா நவுஷத் காரில் பயணம் மெர்டக்கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Single lady Safe Journey For india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->