அவசரமாக கூடும் காங்கிரஸ் கூட்டம்! பாஜக தலைவரின் அதிரடி அறிவிப்பு! 19 லட்சம் பேரின் நிலை என்ன?!  - Seithipunal
Seithipunal


அசாமில் இருக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமையை உறுதி செய்யும், தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. கடந்த முறை வெளியாகிய பட்டியலில் அங்கு விண்ணப்பித்த 3 கோடியே 29 லட்சம் பேரில் 2 கோடியே 90 லட்சம் பேரின் பெயர்கள் மட்டுமே வரைவுப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து அங்கு விடுபட்ட பலரும் தங்கள் பெயரையும் சேர்க்க வேண்டும் என மீண்டும் விண்ணப்பங்களை அளித்தனர். 

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் விதமாக தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட  வரைவுப் பட்டியலில் அசாமில் வாழும் மக்களில் 41 லட்சம் பேர் விடுபட்டனர். தங்களையும் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியலில் இணைக்க அவர்கள் கோரிக்கை வைத்து மனு அளித்திருந்தனர்.  

இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், மொத்தம் 3,11,21,004 நபர்கள் இறுதி தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளார்கள். கோரிக்கைகளை சமர்ப்பிக்காதவர்கள் உட்பட 19,06,657 நபர்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. அவர்கள் இந்த முடிவில் திருப்தி இல்லையென்றால் நாங்கள் இந்தியர் என்பதற்கான ஆதாரணங்களை வெளிநாட்டினர் தீர்ப்பாயங்களுக்கு முன் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து காங்கிரஸ் கட்சி, அசாம் தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) இறுதி பட்டியல் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக விரைவில் 10 ஜன்பத்தில் கூட்டம் நடைபெற உள்ளது என அறிவித்துள்ளது.

மேலும் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, டெல்லியிலும் சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்துள்ளதாகவும், அது மிகவும் ஆபத்து என்பதால், டெல்லியிலும் விரைவில் தேசிய குடிமக்களின் பதிவு விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shortly congress meeting in Delhi for NRC Assam issue


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->