பேரதிர்ச்சி! அரை நிர்வாணமாக கிடந்த பெண்ணின் சடலம்...! ஆஷா பணியாளருக்கு நடந்த சோகம் என்ன?
Shocking body of a woman lying without cloth What happened Asha worker
உத்தரபிரதேசத்தில் பாக்பத் மாவட்டம் ஹம்பூர் கிராமத்தை சேர்ந்த 40 வயதான அஞ்சலி, அவரது கணவர் ஷம்வீர். அஞ்சலி அப்பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆஷா பணியாளராக வேலை செய்து வந்தார்.இந்நிலையில், நேற்று காலை அஞ்சலி வேலைக்கு சென்றுள்ளார். ஆனால், மாலை அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் காவலில் புகாரளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் மாயமான அஞ்சலியை தேடி வந்தனர்.இந்த சூழலில்,இன்று பாரத் என்ற பகுதியில் கொடனா கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வீட்டின் அருகே பிளாஸ்டிக் பையில் அரைநிர்வாண நிலையில் அந்த பெண்ணின் சடலம் கிடப்பதாக காவலருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவலர்கள், பெண்ணின் சடலத்தை கைப்பற்றினர். அதன் பின்னர், விசாரணையில் அந்த பெண் மாயமான அஞ்சலி என்பது தெரியவந்தது. மேலும், அஞ்சலியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததற்கான அடையாளங்கள் இருந்தன.
இதையடுத்து, அஞ்சலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று உடலை ஆள் நடமாட்டமற்ற கட்டிடம் அருகே வீசிச்சென்ற நபர் யார் என்பது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை, அஞ்சலியை அவரின் கணவரின் சகோதரனான (மைத்துனர்) பூபேந்திரா துப்பாக்கியால் சுட்டுக்கொன்றிருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுவரை பூபேந்திராவிடம் விசாரணை நடைபெறவில்லை.
English Summary
Shocking body of a woman lying without cloth What happened Asha worker