முதலமைச்சர் பதவி ஏற்க ரூ.2 கோடி செலவு..! தகவல் அறியும் உரிமை சட்டத்தால் வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மகாராஷ்டிராவில் சட்டமன்றதேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவிற்கு பின்னர் முதலமைச்சர் பதவி பிரச்சினையில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணியை முறித்துக் கொண்டு முரண்பட்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியை உருவாக்கி ஆட்சி பிடித்தது. 

கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி இந்த புதிய அரசு, பதவி ஏற்றது. சிவாஜி பார்க்கில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் 3 கட்சிகளை சேர்ந்த தலா இரண்டு அமைச்சர்களும் பதவி ஏற்றனர். 

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் நடத்தப்பட்ட அரசு நிகழ்ச்சிகளுக்கான செலவினம் குறித்து சமூக ஆர்வலர் நிகில் சம்பத் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

இதற்கு அளிக்கப்பட்ட பதிலில், " முதலமைச்சர் பதவி ஏற்ற விழா செலவு விபரம் தெரிவிக்கப்பட்டது. சிவாஜி பார்க்கில் நடைபெற்ற அந்த பதவி ஏற்பு விழாவிற்கு 2 கோடியே 79 லட்சம் செலவானதாக கூறப்பட்டு இருந்தது. 

இதில் பூக்களுக்கு மட்டுமே 3 லட்சம் செலவானதாக தெரிவிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்பின் போது 98 லட்சத்து 37 ஆயிரம் செலவானதாக கூறப்பட்டு இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shiv sena udhav thakre cm function 2 crore expense


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->