அழைப்பு விடுத்த சிவசேனா... காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸின் நிலை என்ன?...!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் முதலமைச்சர் பதவி தொடர்பான பிரச்சனையில் பாஜக - சிவசேனா கூட்டணியானது நிறைவு பெற்றது. மேலும், கொள்கையில் முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு சிவசேனா கூட்டணியாட்சியை அமைத்தது. 

இந்த கூட்டணி அரசானது அமைக்கப்பட்டு சுமார் 100 நாட்கள் நிறைவுபெறவுள்ளதால், மார்ச் மாதத்தின் போது உத்தவ் தாக்கரே அயோத்திக்கு சென்று இராமரை வழிபட்டுவிட்டு வரப்போவதாக, அக்கட்சியுடைய தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த பயணத்திற்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த நபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சஞ்சய் ராவத் தெரிவித்த சமயத்தில், எங்களது கூட்டணி கட்சியினருக்கும் ராமரை வழிபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அனைவரின் இல்லத்திலும் ராமரை வணங்கி வருகின்றனர். இதனால் அயோத்தியில் தங்களுடன் அவர்களும் வரலாம். கடந்த நவம்பர் மாதத்தின் போதே உத்தவ் தாக்கரே அயோத்தி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், பயணம் தள்ளிவைக்கப்பட்டு மார்ச் மாதத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ராமரின் அருளால் இந்த ஆட்சி 5 வருடத்தை நிறைவு செய்யும் என்றும், முதலமைச்சர் ராமரின் அருள் பெற்று, எதிர்காலத்திற்கான திட்டங்களை பட்டியலிடுவார் என்றும் கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shiv sena uddhav thakre went ayodhya ram mandir temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->