பாஜகவின் கொள்கைக்கு திடீரென ஒத்துப்போன சிவசேனா... அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்திய குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான விசயத்திற்கு இந்தியா முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

மேலும், மத அடிப்படையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வந்துள்ள இஸ்லாமியர் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான குடியுரிமை திருத்த சட்டத்திற்கு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. 

இது தொடர்பான போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், மேற்கூறிய நாடுகளில் இருந்து வரும் முஸ்லீம்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. 

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. 

இந்த விசயத்திற்கு தற்போது ஆதரவு தெரிவித்து சிவசேனா தனது அதிகாரபூர்வ பத்திரிகை சாம்னாவில் தெரிவித்துள்ளதாவது, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டினை சார்ந்த இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து கட்டாயம் வெளியேற்ற வேண்டும். 

சிவசேனா கட்சி எந்த நேரத்திலும் இந்துத்துவத்திற்க்காக போராடிக்கொண்டே இருக்கும். குடியுரிமை சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை சரி செய்ய வேண்டும். மஹராஷ்டிர மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியால் 5 வருடத்தில் செய்ய இயலாத பணிகளை, தற்போதைய அரசு 50 நாட்களில் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shiv sena Saamana speech about Citizenship act


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->