கூட்டணி கட்சியின் தொகுதியில்., எதிர்ப்பு வேட்பாளர்.! அடத்தில் பாஜக., விடாப்பிடியில் சிவசேனா..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தலானது நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அம்மாநில கூட்டணி கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில்., இரண்டு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு பிரச்சனையானது ஏற்பட்டு இருந்தது. 

இந்த பிரச்சனை இறுதி வரை நீடித்து வந்த நிலையில்., வேட்புமனுத்தாக்கல் செய்ய 2 நாட்கள் மட்டும் உள்ளது என்ற நிலையில்., தங்களின் கூட்டணியை உறுதி செய்து அறிவித்தது. இந்த கூட்டணி உறுதியானத்திற்கு பின்னர்., தொகுதி பங்கீடு விபரங்களை அடுத்தடுத்து அறிவித்தது. இந்த சமயத்தில்., அங்குள்ள கன்காவ்லி தொகுதியில் முதலமைச்சரின் மகனான நிதீஷ் ரானேவை வேட்பாளராக அறிவித்தனர். 

bjp,

மேலும்., முதலமைச்சரின் மகனிற்கு தொகுதி வேட்பாளராக நிறுத்த, சிவசேனா துவக்கத்தில் இருந்தே பாரதிய ஜனதா கட்சியினை வற்புறுத்தி வந்த நிலையில்., நிதிஷிற்கு சீட் கொடுத்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தவே., இதனையடுத்து நிதிஷிற்கு எதிராக சிவசேனா தனது சார்பில் எதிர்ப்பாக வேட்பாளரை நிறுத்தியுள்ளது. சிவசேனா கட்சியின் சார்பாக சதீஷ் சாவந்த் போட்டியிடவுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது., எங்களின் எதிர்ப்பை மீறியும்., பாஜக நிதிஷை இறுதி நேரத்தில் வேட்பாளராக அறிவித்துள்ளது. இதனால் எங்களின் எதிர்ப்பை தீவிரப்படுத்த., கூட்டணியில் பாஜக இருந்தும்., பாஜகவிற்கு எதிரான வேட்பாளரை நிறுத்தியுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. இது அங்குள்ள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shiv sena create problem opposite to bjp in mumbai election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->