தடுப்பூசி தயாரிப்பு, விநியோகத்திற்கு பாதிப்பு இல்லை - சீரம் நிறுவனம்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்தான கோவிட்ஷீல்டை, இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. தற்போது, இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 

இதனால் மருந்து தயாரிப்பு பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே சீரம் நிறுவனத்தின் முதல் நுழைவு வாயிலில் தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 

அங்கிருந்து கரும்புகை வெளியேறவே, தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், 10 க்கும் மேற்பட்ட வாகனத்தில் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், சீரம் நிறுவனத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த தீவிபத்தால் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு மற்றும் அனுப்பும் பணிகளில் பாதிப்பு இல்லை என்று சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Serum Institute Explain about No Problems Vaccine Production and Distribution


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->