தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் உயர்ந்த கொரோனா தொற்று.. மீண்டும் கடுமையாகப்போகும் ஊரடங்கு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால், கேரளாவில் மட்டும் கொரோனா தொற்று குறையவில்லை.

கொரோனாவை கட்டுப்படுத்த கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் கடந்த சில நாட்கள் முன்பு கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் மீண்டும் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று கேரள மாநிலத்தில் 30,196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் திடீரென அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிலிருந்து 27,579 பேர் குணமடைந்த நிலையில் 181 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வாரம் கேரளாவில் கொரோனா குறைந்ததை தொடர்ந்து, இரவு நேர ஊரடங்கு, சனி மற்றும் ஞாயிற்றுகிழமை முழு ஊடங்கில் தளர்வுகள் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sep 08 corona positive rise in kerala


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->