முதலாம், இரண்டாம், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள்! உச்சநீதிமன்றம் கூறியது என்ன?! - Seithipunal
Seithipunal


முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை, பல்கலைக்கழகங்கள் விருப்பப்பட்டால் யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு தேர்வை நடத்தி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

உச்சநீதிமன்றத்தில், முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், "பல்கலைக்கழகங்கள் விரும்பினால், முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என்றும், யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு தேர்வை நடத்தலாம்" என தெரிவித்துள்ளது.

மேலும், முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு தொடர்ந்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முன்னதாக, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் தேர்வை நடத்த அனுமதி வழங்கியதுடன், தேர்வை எழுதாமல் பட்டங்களை வழங்கக்கூடாது என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி, வரும் 30ம் தேதிக்குள் இந்த தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

semester exam case in indian sc


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->