டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியை நேற்று கர்நாடக மாநிலத்தின் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேரில் சந்தித்து பேசினார். இந்த சமயத்தில் பேசிய சித்தராமையா., எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்கியதிற்கு நன்றிகளை தெரிவித்து கொண்டு., கர்நாடக மாநிலத்தில் காலியாக இருக்கும் 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் மாதத்தின் போது இடைத்தேர்தல் நடைபெறுவது குறித்தும்., வேட்பாளர்கள் தேர்வுகள் குறித்தும் உள்ள விபரங்களை கூறியுள்ளார். 

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்., என் மீது அதிகளவு நம்பிக்கை வைத்து பதவி வழங்கிய சோனியா காந்தி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போதைய கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து தெரிவித்தேன்., வருமான வரி சோதனை குறித்து என்னிடம் கேட்டதற்கு., எனக்கு முழுமையான விளக்கம் தெரியவில்லை என்று கூறினேன். 

மேலும்., பத்திரிகைகளில் வெளியான தகவலின் படி எந்த விதமான பரிமுதலும் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தேன். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கர்நாடக மாநிலத்தின் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வேன் என்றும்., தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசும் செயலுக்கு வாய்ப்பில்லை என்றும்., காங்கிரஸ் கட்சியுடைய கொள்கையை விரும்பி வரும் நபர்களை கட்சியில் தயங்காமல் ஏற்று கொள்வேன். 

கர்நாடக மாநிலத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சி செத்துவிட்டது என்றும்., இது வரை எந்த பணியும் நடைபெறவில்லை என்றும் கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசு கண்டுகொள்ள வில்லை மற்றும் சட்டவிரோதமாக அமைந்த அரசின் முதலமைச்சராக எடியூரப்பா செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seetharamaiah meets sonia gandhi in delhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->