டிசம்பர் 04 இந்தியா வரும் விளாடிமிர் புடின்; உச்சகட்ட பாதுகாப்பில் டெல்லி..!
Security tightened as Vladimir Putin arrives in Delhi on December 4
ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் நாளை மறுநாள் ( டிசம்பர் 04) டில்லி வரவுள்ள நிலையில், அங்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். இரு நாள் பயணமாக டில்லி வரவுள்ள அவர் எங்கு தங்க உள்ளார். எங்கெங்கு செல்ல உள்ளார் என்பன போன்ற தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
புடின் வந்து செல்லும் வரை கண்காணிப்பு பணியில் உள்ள அனைத்து அமைப்புகளும், உஷாராக இருக்க வேண்டும் என டெல்லி போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிமிடத்துக்கு நிமிடம் நடக்கும் ஒவ்வொரு நடமாட்டமும் கண்காணிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், போக்குவரத்து முதல், தூய்மைப்பணி வரையில், டில்லி போலீசின் மூத்த அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

புடினின் பயண திட்டத்தின் படி, அனைத்து இடங்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், முன்னரே தூய்மைப் பணியும் செய்யப்பட்டுள்ளதாகவும் இப்பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
மேலும், பாதுகாப்புப் பணியில் ஸ்வாட் படையினர், பயங்கரவாத தடுப்பு குழுவினர், அதிவிரைவுப் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதில், ட்ரோன் கண்காணிப்பு, சிசிடிவி கண்காணிப்பு, தொழில் நுட்ப கண்காணிப்பு அமைப்புகளும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளனர்.
புடினுடன் ரஷ்ய பாதுகாப்புப் படையினரும், புடினின் பாதுகாவலர்களும் டில்லிக்கு வந்து பாதுகாப்பை ஆய்வு செய்யவுள்ளனர். போக்குவரத்து மாற்றங்கள், கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Security tightened as Vladimir Putin arrives in Delhi on December 4